பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஜனவரி 30 அன்று "தீவிர சிந்தனை: புதிய பாதைகளை உருவாக்குதல்" என்ற ஒரு நாள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 28 JAN 2023 11:39AM by PIB Chennai

இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பயன்பாட்டுடன், கிராமப்புறங்களும் அரசின் சிறந்த மின்-ஆளுமை தளங்களின் தேவையை உணர்ந்துள்ளன. 'அதிகபட்ச நிர்வாகம் - குறைந்தபட்ச அரசு' என்ற கொள்கை நோக்கத்துடன் 'அடுத்த தலைமுறை' சீர்திருத்தங்களைப் பின்பற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும், தற்போதைய மின்-ஆளுமை பயன்பாடுகளை முதன்மையாகக் கொண்டு இ-கிராம் ஸ்வராஜ்-ஐ மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கவும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புதுதில்லியில், 2023, ஜனவரி 30 அன்று 'தீவிர சிந்தனை: புதிய பாதைகளை உருவாக்குதல்' என்ற ஒரு நாள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மிகவும் பயனுள்ள இ-கிராம் ஸ்வரஜ் 2.0-ஐ உருவாக்குவதற்கும்  பொதுவான புரிதலை வளர்ப்பதற்கும்  முழுமையான உள்ளீடுகளை இந்த மாநாடு கண்டறியும். இதன்மூலம், செயற்கருவிகளை  சீரமைப்பது மட்டுமின்றி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் அன்றாடப் பணிகளை எளிமைப்படுத்தவும் முடியும்.

இந்த நிகழ்வில் புகழ்பெற்ற தேசிய/ சர்வதேச  நிறுவனங்களின் தொழில் வல்லுநர்கள், பல்வேறு மாநிலங்களின்   பிரதிநிதிகள்/ மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்போர் மற்றும் நிர்வாகக் களத்தில் ஈடுபட்டுள்ள தரவுத் திரட்சியாளர்கள் கலந்துகொள்வார்கள். https://webcast.gov.in/mopr என்ற இணையதளத்தில் இந்தக் கருத்தரங்கின் நேரடி  ஒளிபரப்பைக் காணலாம்.

*****

 

SMB / DL


(Release ID: 1894273) Visitor Counter : 184