ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே காவல் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள்
Posted On:
25 JAN 2023 12:47PM by PIB Chennai
2023ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில், ரயில்வே காவல் படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த பதக்கத்திற்கான தேர்வுப் பட்டியலில் தெற்கு மத்திய ரயில்வே, கிழக்கு கடலோர ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, தெற்கு ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சப்- இன்ஸ்பெக்டர் திரு கே ராஜேந்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் திரு சஜி அகஸ்டின் உட்பட 13 பேருக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
**************
AP/ES/PK/KRS
(Release ID: 1893681)
Visitor Counter : 145