வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகத்துறையினர்நிலையான, பசுமை வழியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : மத்தியஅமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 23 JAN 2023 3:08PM by PIB Chennai

வர்த்தகத்துறையினர் நிலையான, பசுமை வழியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  மத்திய வர்த்தகம்,  தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு, பொதுவிநியோம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  மேலும், ஜி-20 தலைமையின் கீழ், பி-20 வர்த்தக மன்றத்தின் வாயிலாக அனைவரும் இணைந்து எவ்விதம் செயலாற்றி நிலையான, சமமான எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். காந்திநகரில் இன்று நடைபெற்ற வர்த்தகம் -20 கூட்ட தொடக்கவிழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். வர்த்தகம் -20 கூட்டத்தின் மூலம் உலகளாவிய வர்த்தகம் குறித்து ஜி-20 உறுப்புநாடுகள் அனைத்தும் பொருளாதார மேம்பாடு குறித்தும் விவாதிக்கும் ஒரு தளமாகும்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மத்திய அமைச்சர் திரு பியூஷ்கோயல், நமது சுதந்திரப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்தி சென்றவர்களில் ஒருவராவார். நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நேதாஜியின் தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான வசுதைவ குடும்பகத்தின் கீழ் அமைதி, பேச்சுவார்த்தை, முறையான ஒட்டுமொத்த வளர்ச்சி, மனிதநேய அணுகுமுறை போன்றவைகளை பாராட்டிப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காலநிலை மாற்றம், டிஜிட்டல் முறையிலான பொது உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற எல்லா துறைகளிலும் உலக அளவில் இந்தியா பொறுப்பு மிக்க வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.  மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டிய மத்திய அமைச்சர், வருங்கால சமூகத்தினர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட உலகத்தை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். நிலையான வளர்ச்சியில் என்றுமே இந்தியா முனைப்போடு செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.   கடந்த 3 தசாப்தத்தில் இந்தியா 12 முறை பொருளாதார வளர்ச்சிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நமது பிரதமர் திரு மோடி, உள்கட்டமைப்பில் முதலீடு, ஒற்றுமை, ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சர்வதேச பார்வை போன்றவைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார் என்று கூறினார்.

----- 

AP/GS/KPG/KRS



(Release ID: 1893060) Visitor Counter : 170