உள்துறை அமைச்சகம்

பரம் வீர் சக்ரா விருது பெற்ற நமது வீரர்களை என்றும் நினைவு கூறும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சி முப்படையினரையும் மிகவும் ஊக்கப்படுத்துகிறது - திரு அமித் ஷா

Posted On: 23 JAN 2023 5:13PM by PIB Chennai

அந்தமான் நிக்கொபரில் பெயரிடப்படாத பெரிய 21 தீவுகளுக்கு, பர்ம வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயர்களை தீவுகளுக்கு பெயரிடும்  நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்றார்.   இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்பட உள்ள தேசிய நேதாஜி நினைவக மாதிரியையும் அவர் திறந்து வைத்தார். 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001ZXGI.jpg

போர்ட்பிளேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஓய்வு பெற்ற மேஜர் சுபேதார் யோகேந்திர சிங் யாதவ், சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், நைப் சுபேதார் பானா சிங் மற்றும் மற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை அவர் கௌரவித்தார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002E3MX.jpg

அப்போது பேசிய திரு அமித் ஷா, உலகில் எந்த நாடும் தங்களது தீவுகளுக்கு அவர்களுடைய மறைந்த ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டவில்லை என்றும், எனவே இன்றைய நாள் முப்படையினருக்கும் முக்கியமான நாள் என்றும் கூறினார்.  பரம் வீர் சக்ரா விருதுப் பெற்ற நமது வீரர்களை என்றும் நினைவு கூறும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சி, முப்படையினரையும் மிகவும் ஊக்கப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் பராக்கிரம (துணிச்சல்) தினமாக கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.  21 தீவுகளுக்கு பெயர் சூட்டப்பட்டதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி வீரர்களை கவுரவப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த திரு அமித் ஷா, இந்தியாவின் வரலாற்றை எழுதும் போதெல்லாம் இந்த நிகழ்ச்சி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image003YVPS.jpg

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image004HXSD.jpg

***

AP/IR/RJ/KRS



(Release ID: 1893057) Visitor Counter : 171