மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை வளர்க்கும் இளையோரின் தேசிய மாநாடு குஜராத்தில் நடைபெற்றது
Posted On:
21 JAN 2023 2:00PM by PIB Chennai
கால்நடை வளர்க்கும் இளையோரின் தேசிய மாநாட்டிற்காக 16 மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலம் புஜ் நகரில் இளைஞர்கள் திரண்டனர். தங்களின் விருப்பங்கள், சவால்கள், கொள்கை வகுப்பதற்குத் தேவையான விஷயங்கள் பற்றி அரசுடன் விவாதிப்பதற்கு இந்த மாநாடு நடைபெற்றது. சஹ்ஜீவன் எனும் கால்நடை வளர்ப்புக்கான மையம் இதற்கு ஏற்பாடு செய்தது மிகவும் பொருத்தமானது. ஒட்டகப் பால் கொள்முதல், கால்நடை வளர்ப்போர்க்கு அங்கீகாரம், கால்நடை வளர்ப்போர்க்குப் பாதுகாப்பு, சமூக நிறுவனங்கள் மூலம் கைவினைப் பாலாடைக்கட்டி தயாரிப்பு போன்ற விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டன.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா விவாதத்தைத் தொடங்கிவைத்தார். கால்நடை உற்பத்தி முறையில் விரிவான அக்கறையுடன் கீழ்க்காணும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பின் பகுதியாக கால்நடை வளர்ப்போர் கணக்கெடுப்பை இணைப்பது;
பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்குள் கால்நடை வளர்ப்போர் பிரிவு ஒன்றை உருவாக்குதல்;
தேசிய கால்நடை இயக்கத்திற்குள் விரிவான கால்நடை உற்பத்தி முறை தொடர்பான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலை இணைப்பதற்குத் தொடக்க முயற்சி;
வெப்பநிலையுடன் தொடர்புடைய அழுகும் பொருட்கள் போக்குவரத்திலும், இருப்பு வைத்தலிலும் கம்பளியைப் பயன்படுத்துதல்;
உள்நாட்டுக் கம்பளிக்கு தேசிய இயக்கம், பசுமாடு அல்லாத (வெள்ளாடு, செம்மறியாடு, கழுதை, எருமை) கால்நடைகளின் பாலினை சந்தைப்படுத்துவதற்கு நிறுவன தளங்களை உருவாக்குதல்; கால்நடை வளர்க்கும் மக்களுக்கு அடையாளம் வழங்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல்.
இந்த மாநாட்டில் கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா, இணை ஆணையர் டாக்டர் சஜித் தத்தா, உதவி ஆணையர் டாக்டர் தேபலினா தத்தா, அமைச்சகத்தின் புள்ளிவிவர ஆலோசகர் திரு சுமேத் நக்ராரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முழுமையான அணுகுமுறை கண்ணோட்டத்திற்காகவும், சாத்தியமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும் ஒட்டகத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையம், வேளாண் கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், மத்திய கம்பளி மேம்பாட்டு வாரியம் போன்றவற்றின்
வல்லுனர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
*****
SMB / DL
(Release ID: 1892692)
Visitor Counter : 203