புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் இலக்கு நிர்ணயிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 20 JAN 2023 12:32PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2022-23-ஆம் நிதியாண்டுக்கான செயல்திறன் தொடர்பாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் இந்த ஆண்டு வருவாயாக ரூ.3,361 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு நிர்ணயித்துள்ளது. இது முந்தைய ஆண்டு வருவாயைவிட 18% அதிகமாகும். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் தி்ரு பிரதீப் குமார், கடந்த 2 ஆண்டுகளில் இந்த முகமையின் மிகச் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருந்ததாகக் கூறினார். இந்த ஆண்டும் இலக்குகளை அடைய முழுவீச்சில் செயலாற்றி வருவதாக அவர் கூறினார்.

இந்த அமைப்பு தற்போது வரை 3,068 புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. நாட்டில் 19,502 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை கூடுதலாக மேற்கொள்ள இது பங்களிப்பை வழங்கியுள்ளது.

------

SMB/PLM/KPG/KRS



(Release ID: 1892418) Visitor Counter : 169