வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஸ்டார்ட் அப் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் வாரத்தையொட்டி இன்று தேசிய ஸ்டார்ட்அப் 2022- விருதுகள் வழங்கப்பட்டன
प्रविष्टि तिथि:
16 JAN 2023 5:38PM by PIB Chennai
ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் வாரத்தையொட்டி, தேசிய ஸ்டார்ட்அப் தினமான இன்று தேசிய ஸ்டார்ட்அப் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய தொழில், வர்த்தகத் துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
நிதிப் பயனை மட்டும் அடையாமல், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேசிய ஸ்டார்ட்அப் 2022 விருதுகள் வழங்கப்பட்டன.
நேரடியாகவும், இணையதள வாயிலாகவும் பெங்களூரு, இந்தூர், போபால், தில்லி, கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில் ஸ்டார்ட்அப் இந்தியா நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு, நிபுணர் குழு விவாதம், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் சவால்கள், ஸ்டார்ட்அப் கண்காட்சி, ஸ்டார்ட்அப் மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
***
SG/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 1891650)
आगंतुक पटल : 288