சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

யானைக்கால் நோயை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த தேசிய கருத்தரங்குக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்

Posted On: 13 JAN 2023 1:49PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிணநீர் யானைக்கால் நோயை  அகற்றுவதற்கான இந்தியாவின் வழிமுறைகள்  குறித்த தேசிய கருத்தரங்குக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பாலும் கலந்து கொண்டார்.

  "இந்தியாவைப் பொறுத்தவரை, நிணநீர் யானைக்கால் நோய்  என்பது வேறு சில நாடுகளில் இருப்பதைப் போல புறக்கணிக்கப்பட்ட நோயல்ல, ஆனால் சரியான நேரத்தில் நீக்குவதற்கான முன்னுரிமை நோயாகும். 2027 ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை அகற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, உலக இலக்கை விட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, தீவிர நடவடிக்கைகள் மூலம் நாங்கள் வழிமுறைகளை வகுத்துள்ளோம்”என்று அவர் கூறினார். பிற நோய்களை ஒழிப்பதில் நாட்டின் பரந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு, இந்நோய்  ஒழிப்புக்கான புதுப்பிக்கப்பட்ட ஐந்து முனை உத்தியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

• பல மருந்து நிர்வாகப் பிரச்சாரம் ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய குடற்புழு நீக்க தினத்துடன் (பிப். 10 மற்றும் ஆகஸ்ட் 10) இணைந்து நடத்தப்படும்.

• ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை; நோய் மேலாண்மை மற்றும் இயலாமை  சேவைகளை வலுப்படுத்த மருத்துவக் கல்லூரிகளின் ஈடுபாடு

• பல துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த கொசு  ஒழிப்பு

• தொடர்புடைய துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு

•  ஏற்கனவே உள்ள டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் மற்றும் மாற்று கண்டறிதல்களை ஆராய்தல்

***

AP/PKV/RJ



(Release ID: 1890977) Visitor Counter : 230