ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நாடு முழுவதும் 651 மாவட்டங்களில் மக்கள் மருந்தகங்கள் திறப்பதற்கான வாய்ப்பு

Posted On: 12 JAN 2023 4:27PM by PIB Chennai

அனைவருக்கும் நியாயமான விலையில், தரமான மருந்துகள்  கிடைப்பதற்கு  மருந்து உற்பத்தித் துறை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-மாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் இதில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திய மருந்து உற்பத்தித்துறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைப்பின் பரிந்துரையின்படி பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 651 மாவட்டங்களில் புதிய மக்கள் மருந்தகங்கள் திறப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் சுயவேலைவாய்ப்பு பெற வகை செய்யப்பட்டுள்ளது.

***

SM/IR/KPG/PK

 



(Release ID: 1890769) Visitor Counter : 165