நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23 நிதியாண்டின் 10.01.2023 வரையிலான நேரடி வரிவசூல்

Posted On: 11 JAN 2023 5:59PM by PIB Chennai

2022-23 நிதியாண்டில் 10.01.2023 வரையிலான நேரடி வரிவசூல் நிலையான வளர்ச்சி அடைந்திருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்துள்ளன. அதாவது, 2023-ஆம் நிதியாண்டு ஜனவரி 10-ம் தேதி வரையிலான காலத்தின் மொத்த நேரடி வரிவசூல் ரூ.14.71 லட்சம் கோடியாகும். இது கடந்த நிதியாண்டின் இந்த காலத்திற்கான மொத்த வரிவசூலைவிட 24.58 சதவீதம் அதிகமாகும்.

அதே போல் இந்த காலத்திற்கான நிகர நேரடி வரிவசூல் ரூ.12.31 லட்சம் கோடியாகும். இது கடந்த நிதியாண்டின் இந்த காலத்திற்கான நிகர வரிவசூலைவிட 19.55 சதவீதம் அதிகமாகும்.  இது 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் வரிவசூல் மதிப்பீட்டில் 86.68 சதவீதமாகும்.

 

***

TV/ES/KPG/RJ


(Release ID: 1890504)
Read this release in: English , Urdu , Marathi , Telugu