மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சரிபார்ப்பு நிறுவனங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது

Posted On: 10 JAN 2023 2:46PM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நேர்முகமாக தகவல் சரிபார்க்கும் முகமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  பயன்பாட்டாளர்கள் நிலையில் சிறந்த பாதுகாப்பு விஷயங்கள் இந்த முகமைகளால் பயன்படுத்தப்படுவதை எடுத்துரைத்துள்ள ஆணையம் சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக தாமாக முன்வந்து ஆதார் பயன்படுத்தப்படும் நிலையில் குடியிருப்பு தாரர்களின் நம்பிக்கையை மேலும் விரிவுபடுத்தும் வழிமுறைகளையும் இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. 

ஆதார் எண் வைத்திருப்போரின் ஒப்புதலை பெற்று ஆதார் தகவல்களை சரிபார்க்குமாறு இத்தகைய அமைப்புகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.  நேர்முக சரிபார்ப்பு நடத்தும் போது  ஆதார் குறித்த பாதுகாப்பும் ரகசிய தன்மையும் உறுதி செய்யப்படுவதை குடியிருப்புதாரர்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.

ஆதாரைப் பயன்படுத்துவோரின் ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றும் இது எதிர்காலத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தணிக்கை செய்யும் போது அல்லது சட்டரீதியான இதர நடவடிக்கைகளின் போது பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை அல்லது அதன் மின்னணு வடிவத்தை ஏற்பதற்கு பதிலாக ஆதார் கடிதம், இ-ஆதார், எம்-ஆதார், பிவிசி அட்டை ஆகிய 4 வடிவங்களில் ஒன்றினைப் பயன்படுத்தி கியூஆர்கோட் மூலம் ஆதார் சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ளுமாறு நேரடி சரிபார்ப்பு முகமைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1889996

***

SMB/RJ/KPG

 

 

 

 


(Release ID: 1890025) Visitor Counter : 218