நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
09 JAN 2023 2:35PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளது
முதலாவதாக, ( ஐ எஸ் 18112:2022) தரநிலை - செயற்கைக்கோள் ட்யூனர் வசதி கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி.
இத்தரநிலையில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகளின் மூலம், வீட்டின் சுவற்றில் அல்லது கூரையில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் இணைத்து, இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம்
இதனால் தூர்தர்ஷன் போன்ற இலவச சேனல்களைக் காண நேயர்களுக்கு செட்டாப் பாக்ஸ் தேவைப்படுவதில்லை.
இரண்டாம் (ஐ எஸ் /ஐ ஈ சி 62680-1-3:2022) தர நிலை - சீ வகை கேபிள் களுக்கான யூஎஸ்பி தரநிலை.
இதன் மூலம் தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற எல்லா இயந்திரங்களுக்கும் ஒரே வகையான சீ வகை கேபிள்களை பயன்படுத்தலாம். இதனால் நாட்டின் மின்னணு கழிவுகள் குறைந்து பொதுமக்களுக்கும் தேவையற்ற செலவை குறைத்து நிலையான அபிவிருத்திக்கான பாதையில் நம்மை கொண்டு செல்லும்
மூன்றாம் (ஐ எஸ் 16910) தரநிலை - வீடியோ கண்காணிப்பு அமைப்புகளுக்கான இந்திய தரநிலைகள்.
வீடியோ கண்காணிப்பு அமைப்புகள் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டங்களில் மிகவும் அத்தியாவசியமான தேவையானது. இது பல விபரீத சம்பவங்களில் ஆதாரமாக விளங்கலாம். ஆனால், இது குறித்த குழப்பங்கள் பொதுமக்களுக்கு இருப்பதாலும், இதை பயன்படுத்தும் தயக்கம் பல பேருக்கு இருப்பதாலும் இதனை தவிர்க்க வீடியோ கண்காணிப்பு அமைப்புகளுக்கான கேமரா போன்ற கருவிகள், அமைப்பு தேவைகள் மேலும் பொருத்துவதற்கான விதிமுறைகள் ஆகியவை குறித்த விரிவான தகவலை இத்தரநிலையில் வழங்கியுள்ளது இந்திய தர நிர்ணய அமைவனம்.
***
SM/RKM/RJ
(रिलीज़ आईडी: 1889799)
आगंतुक पटल : 256