வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

13வது இந்தியா-அமெரிக்க வர்த்தகக் கொள்கை மன்றக் கூட்டத்தில் பங்கேற்க, மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் 9-11 ஜனவரி 2023 வரை நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டி.சி. அரசுமுறைப் பயணம்

Posted On: 08 JAN 2023 12:56PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியா - அமெரிக்க வர்த்தகக் கொள்கை மன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 9-11 ஜனவரி 2023 வரை நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டி.சி.க்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

பயணத்தின் முதல் கட்டமாக, அமைச்சர் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பு, சமூக நிகழ்வில் பங்கேற்பு, வர்த்தகக் குழுத் தலைவர்களுடன் வட்டமேசைக் கூட்டங்களில் உரை மற்றும் நியூயார்க்கில் உள்ள தொழில்துறை நிறுவனங்களுக்கு வருகை போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

ஜனவரி 11, 2023 அன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் 13வது வர்த்தகக் கொள்கை மன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன் அவர்  அமெரிக்க வர்த்தகக் கொள்கை மன்ற பிரதிநிதித்துவத்தின் தூதர் கேத்தரின் டையை சந்தித்துப் பேசுகிறார்.

12வது வர்த்தகக் கொள்கை மன்ற அமைச்சர்கள் அளவிலான கூட்டம் 23 நவம்பர் 2021 அன்று புதுதில்லியில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்றது. வர்த்தகக் கொள்கை மன்றம் என்பது வர்த்தகத் துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்பான உறவுகளை மேலும் மேம்படுத்தும் ஒரு தளமாகும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை இரு நாடுகளும் கலந்து கொள்ளும்போது, வர்த்தக விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளன.

வர்த்தகக் கொள்கை மன்றத்துக்கு இந்தியத் தரப்பில் இருந்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், அமெரிக்கத் தரப்பில் வர்த்தகக் கொள்கை மன்ற பிரதிநிதித்துவத்தின் தூதர் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

வாஷிங்டன் டிசியில், அவர் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார். தொழில்துறையின் சில முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். .

பல்வேறு முக்கிய நிழ்வுகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா-இஸ்ரேல்/ ஐக்கிய அரபு நாடுகள்-அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த பார்வை இருக்கிறது. இந்தபயணங்களின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள்  மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*****

MS/GM/DL



(Release ID: 1889618) Visitor Counter : 207