சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நிலக்கரியை வாயுவாக்கிப் பயன்படுத்தும் டால்ச்செர் உரங்கள் தொழிற்சாலைப் பணிகளின் முன்னேற்றத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆய்வு செய்தனர்
Posted On:
07 JAN 2023 3:26PM by PIB Chennai
இந்தியாவைத் தற்சார்புள்ள நாடாக மாற்றுவதற்கு அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவற்றில் உரத்துறையும் ஒன்று என்றும் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உரத் தயாரிப்பு தொழிற்சாலைகளில் நிலக்கரியை வாயுவாக்கிப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நமது சொந்த வளங்களைப் பயன்படுத்தி யூரியா உற்பத்தியில் தன்னிறைவடைவதை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரியதும், நிலக்கரியை வாயுவாக்கிப் பயன்படுத்தும் முதலாவதுமான உரத் தொழிற்சாலையாக தால்ச்செர் பிரிவு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த உரத் தொழிற்சாலையை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மாண்டவியா வலியுறுத்தினார்.
இந்தத் தொழிற்சாலையில் யூரியாவின் ஆண்டு உற்பத்தித் திறன் 12 . 7 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். 2030-ம் ஆண்டுக்குள் 100 மெட்ரிக் டன் நிலக்கரியை எரிவாயுவாக்கும் திட்டமிடலை இது கொண்டுள்ளது. நாட்டில் ஏராளமாகக் கிடைக்கின்ற நிலக்கரியை எரிவாயுவாக்கிப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். டால்ச்செர் யூரியா தொழிற்சாலை 2024 செப்டம்பர் வாக்கில் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*****
MS/SMB/DL
(Release ID: 1889442)
Visitor Counter : 182