ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் 5 நட்சத்திர அந்தஸ்துடன் ‘சரியான நிலையத்தில் உண்ணவும்’ என்ற விருது வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 05 JAN 2023 4:36PM by PIB Chennai

பயணிகளுக்கு உயர்தரமான ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவதன் மூலம் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் 5 நட்சத்திர அந்தஸ்துடன் சரியான நிலையத்தில் உண்ணவும்என்ற விருது வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சுத்தமான உணவை பயணிகளுக்கு அளிப்பதை உறுதி செய்யும் ரயில் நிலையத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

நட்சத்திர சான்றிதழ் பெற்றுள்ள மற்ற ரயில் நிலையங்கள் : ஆனந்த் விஹார் ரயில் நிலையம் (தில்லி); சத்ரபதி சிவாஜி முனையம் (மும்பை) ; மும்பை மத்திய ரயில் நிலையம் (மும்பை), வதோதரா ரயில் நிலையம், சண்டிகர் ரயில் நிலையம் மற்றும் போபால் ரயில் நிலையம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888888

***

AP/IR/AG/RR


(Release ID: 1888906) Visitor Counter : 184


Read this release in: Telugu , English , Urdu , Hindi