இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இளைஞர்20 மாநாட்டின் கருப்பொருட்கள், இலச்சினை அறிமுகப்படுத்தி இணையதளத்தை ஜனவரி 6-ம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
05 JAN 2023 12:26PM by PIB Chennai
இளைஞர்20 மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மாநாட்டின் கருப்பொருட்கள், இலச்சினை அறிமுகப்படுத்தி இணையதளத்தை ஜனவரி 6-ம் தேதி அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார். முதல் முறையாக இந்தியா இளைஞர் 20 மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகள் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இளைஞர்20 மாநாட்டின் கருப்பொருட்கள், இலச்சினை அறிமுகப்படுத்தி இணையதளத்தை தொடங்கி வைக்கிறார். இரண்டாவது அமர்வில், இளம் சாதனையாளர்கள் பங்கு பெறும் குழு விவாத நிகழ்வு நடைபெறுகிறது. அந்த குழு விவாத நிகழ்வில், இளை சமுதாயத்தினரின் அறிவாற்றலை மேம்படுத்தி இந்தியாவை வல்லரசாக்குவது ஆக்குவது என்பது குறித்தும், குழுவில் இடம் பெற்றவர்களின் தனிப்பட்ட சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இளைஞர்20 அலுவல் குழுவில், உலகம் முழுவதிலும் இருந்து தலைமைப் பண்பு கொண்ட இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, சிறந்த வருங்காலத்தை உருவாக்குவது தொடர்பான கருத்துகள் பரிமாறப்பட்டு, அதன் செயலாக்கத்திற்கான திட்டமிடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவின் இளைஞர்20 தலைமைத்துவம் மூலம் உலகளாவிய இளைஞர் தலைமைப் பண்பு மற்றும் பங்களிப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த 8 மாதங்களில், இளைஞர்20 மாநாட்டின் இறுதி வடிவத்தை உருவாக்குவதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளைஞர்20 மாநாட்டின் கருப்பொருட்கள், தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெறும்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஜி-20 தலைமைத்துவம் என்பது சுதந்திர இந்தியாவின் அமிர்தகாலப் பெருவிழாவின் தொடக்கத்தையும், நம் நாடு சுதந்திரம் அடைந்து நூற்றாண்டு கொண்டாடும் அடுத்த 25 ஆண்டு காலகட்டத்தில் வலிமையான, வளமான, ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை உள்ளடக்கியதாகும். குறிப்பாக பொதுமக்களின் பங்களிப்பை பயன்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அடிப்படை தத்துவத்தை உள்ளடக்கிய முன்னேற்றத்தை நாம் நாடு அடைய வேண்டும் என்பதாகும். மேலும் ஒட்டுமொத்த உலகத்தையும் வசுதைவ குடும்பகமாக பாவித்து நன்மை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முக்கிய தீர்மானங்களை எடுக்க இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
********
(Release ID: 1888811)
AP/GS/RJ/PK
(रिलीज़ आईडी: 1888865)
आगंतुक पटल : 278