பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக அந்தமான் நிக்கோபார் தீவு செல்கிறார்
प्रविष्टि तिथि:
05 JAN 2023 12:16PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று (ஜனவரி 05, 2023) அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது, பாதுகாப்பு தயார்நிலை செயல்பாடுகள் குறித்தும் இதற்கான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்வார்.
கேம்ப்பெல் வளைகுடா, கார்னிக், திக்லிபூர் ஆகிய இடங்களில் உள்ள அந்தமான் நிக்கோபார் ராணுவப் பிரிவுகளுக்கும் பயணம் செய்யவிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவார்.
***
(Release ID: 1888807)
AP/SMB/KPG/PK
(रिलीज़ आईडी: 1888828)
आगंतुक पटल : 154