தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது இந்தியா
Posted On:
03 JAN 2023 5:24PM by PIB Chennai
தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (அப்பு) தலைமைப் பொறுப்பை இந்தியா இம்மாதத்தில் ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடைபெற்ற 13-வது அப்பு மாநாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்.
ஆசியான்-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 32 நாடுகள் பங்கேற்றுள்ள அமைப்பாக திகழும் அப்பு, இந்தப் பிராந்தியத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையே அஞ்சலகம் தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் அஞ்சலக சேவைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதே எனவே நோக்கமாகும் என்று டாக்டர் வினயா பிரகாஷ் சிங் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888356
***
SM/PKV/RJ/PK
(Release ID: 1888398)
Visitor Counter : 250