உள்துறை அமைச்சகம்
ஆண்டுக் கண்ணோட்டம் 2022: உள்துறை அமைச்சகம்
Posted On:
03 JAN 2023 12:34PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமீத் ஷா 2022, பிப்ரவரி 18 அன்று நடத்தினார். 2018-ல் 417 ஆக இருந்த தீவிரவாத சம்பவங்கள் 2021-ல் 229 ஆக குறைந்தது என்றும், 2018-ல் 91 ஆக இருந்த பாதுகாப்பு படை வீரர்களின் உயிரிழப்பு 2021-ல் 42 ஆக குறைந்தது என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022 மே 17 அன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்கான தயாரிப்பு பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். கொவிட் -19-க்கு பிந்தைய முதலாவது யாத்திரை என்பதால் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏதாவது உள்ளதா என்பது பற்றி யாத்ரீகர்களிடம் பரிசோதிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஸ்ரீநகரில் 2022 அக்டோபர் 5 அன்று ரூ.2000 கோடி மதிப்புள்ள 240 வளர்ச்சித் திட்டப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டினார்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் 2022 மார்ச் 8 அன்று தேசிய தடய அறிவியல், பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்திற்கு திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் அக்னி பாதைத் திட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பின் மூலம் 4 ஆண்டுகள் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படை பிரிவு, அசாம் ரைபிள்ஸ் பிரிவு ஆகியவற்றில் பணியமர்த்த முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
2009-ம் ஆண்டு மிக அதிகமாக 2258 என்றிருந்த இடது தீவிரவாத சம்பவங்கள் 2021-ல் 509 ஆக குறைந்தது. இதன் காரணமாக 2010-ல் மிக அதிகமாக 1005 என்ற எண்ணிக்கையில் இருந்த உயிரிழப்புகள் (பொது மக்கள் + பாதுகாப்பு படையினர்) 2021-ல் 147 ஆக குறைந்தது.
மணிப்பூரில் ரூ.2,450 கோடி மதிப்பிலான 29 வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில், சச்சரவுகள் நிறைந்த பகுதிகளை பல தசாப்தங்களுக்குப் பிறகு ஆயதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதக் காவல் படையின் நவீனமாக்கும் திட்டம் – IV-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 4 ஆண்டுகள் சேவைகளை நிறைவு செய்த அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் துறையின் வேலைவாயப்பில் முன்னுரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பகுதிகள் அமைதியின்மைக்கும், வன்முறைக்கும் முன்பு ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888244
------
AP/GS/KPG/PK
(Release ID: 1888386)