அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல பரிமாண ஊக்கத்தை வழங்குவதற்காக புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (என்ஆர்டிசி) தலைமையகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்

Posted On: 31 DEC 2022 5:59PM by PIB Chennai

மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு); புவி அறிவியல் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (என்ஆர்டிசி) ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு  பலதரப்பட்ட வகையில் உதவுவதற்கு “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்.

கடந்த ஆகஸ்ட் 15, 2015 அன்று செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா' என்ற அறிவிப்புக்குப் பிறகு, என்ஆர்டிசி தேசிய அளவிலான ஒரே பொதுத்துறை நிறுவனமாகத் தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டது என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் பொது நிதியுதவி ஆராய்ச்சி நிறுவனங்களால் (பிஎஃப்ஆர்ஐ) உருவாக்கப்பட்ட ஆய்வக அளவிலான தொழில்நுட்பங்களை தொழில்துறைக்கு எடுத்துச் செல்வதற்காக அதன் சேவைகளையும் வழங்குகிறது என்றார்.

என்ஆர்டிசி தலைமையகம், சிஎஸ்ஐஆர்-என்ஏஎல் மற்றும் சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் உள்ள இன்குபேட்டர்கள் மூலம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல்வேறு வகையில் உதவ  இன்குபேஷன் வசதியை வழங்குகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், என்ஆர்டிசி குழுவை தேசிய அளவிலான வசதியை ஏற்படுத்த ஒரு ஒட்டுமொத்த அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இந்திய தொழில்நுட்பங்களுக்கான உலகச் சந்தையைக் கண்டறிய வேண்டும் என்றும், என்ஆர்டிசி தொழில்நுட்ப பரிமாற்ற சேவைகளை குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக என்ஆர்டிசியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், கொமடோர் (ஓய்வு) அமித் ரஸ்தோகி மற்றும் அவரது குழுவினரும் டாக்டர் ஜிதேந்திர சிங்கை வரவேற்று, 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, புதுதில்லியில் உள்ள என்ஆர்டிசி தலைமையகத்திற்கு வருகை தந்த முதல் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்  என்பதைச் சுட்டிக்காட்டினர்.

******

MS/GS/DL



(Release ID: 1887790) Visitor Counter : 149