பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 31 DEC 2022 12:46PM by PIB Chennai

இந்தியாவின் மக்கள்தொகையில் பழங்குடியினரின் எண்ணிக்கை  சுமார்  8.6% .  அதாவது,  சுமார் 10.4 கோடி பேர். இந்திய அரசியலமைப்பின் 342 வது பிரிவின் கீழ் 730 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பிரிவுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, மத்திய அரசு பழங்குடியினரின் மேம்பாடு, அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.

பழங்குடியினர் விவகார அமைச்சகம் , இந்த தொலைநோக்கு மற்றும் பழங்குடியினர் நலனுக்கான அதன் நீடித்த அர்ப்பணிப்புக்கு இணங்க, மேம்பட்ட நிதி ஆதாரங்கள், முயற்சிகளின் ஒருங்கிணைப்பு, அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் வழிமுறையை மறுசீரமைத்தல் ஆகியவற்றின் மூலம் துறைசார் வளர்ச்சியை உறுதிசெய்யத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது.

 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு ரூ. 8451 கோடி ஒதுக்கப்பட்டது. இது 12.32% அளவுக்கு அதிகமாகும். 

 பழங்குடியினப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 87,584 கோடி.  முந்தைய ஆண்டில் இது ரூ. 78,256 கோடியாக இருந்தது.  41 மத்திய அமைச்சகங்கள் இத்தொகையை பழங்குடியினர்  நலன் மற்றும் பழங்குடியினப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும்.

 பழங்குடியினர் விவகார அமைச்சகம் 26.37 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு நேரடி பணமாற்றம்  மூலம் உதவித்தொகையை 1 ஏப்ரல் 2022 முதல் 31 டிசம்பர் 2022 வரை வழங்கியது.

 பழங்குடியினர் நல அமைச்சகம் 2637669 மாணவர்களுக்கு  ரூ. 2149.70 கோடி  வழங்கியுள்ளது.

குடியரசு தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இந்த ஆண்டு நவம்பரில் பழங்குடியினர் கவுரவ தின  கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். நவம்பர் 15 ஆம் தேதி , ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டு கிராமத்திற்கு (பகவான் பிர்சா முண்டா பிறந்த இடம்) குடியரசுத் தலைவர் சென்று அங்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத்தில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரையிலும் கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர்,  பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவுக்கு, பழங்குடியினர் கவுரவ தினத்தன்று (15 நவம்பர் 2022 ) நாடாளுமன்ற  மலர் அஞ்சலி செலுத்தினார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு  பகுதியாக,  75 ஆண்டுகால முன்னேற்றம்,  மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடவும், நினைவுகூரவும், 12 ஏகலவ்யா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள்  திறந்து வைக்கப்பட்டுள்ளன. 2022-23 ஆண்டு. திறக்கப்பட்ட 12 பள்ளிகளில், ஆந்திராவில் 4 பள்ளிகளும், அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவில் தலா 2 பள்ளிகளும், குஜராத், சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் தலா 1 பள்ளிகளும் திறக்கப்பட்டன.

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், கர்நாடகாவின் பெங்களூருவில் 31 அக்டோபர் 2022 முதல் நவம்பர் 2 வரை  தேசிய கலாச்சார விழாவை ஏற்பாடு செய்தது.

******

MS/PKV/DL



(Release ID: 1887726) Visitor Counter : 381