பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் நவ்சாரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகை அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
31 DEC 2022 10:37AM by PIB Chennai
குஜராத்தின் நவ்சாரியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து (பிஎம்என்ஆர்எஃப்) கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நவ்சாரியில் சாலை விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி"
இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******
MS/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1887689)
வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam