வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண்மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 16 சதவீதம் உயர்வு
प्रविष्टि तिथि:
30 DEC 2022 4:08PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கு முந்தைய நிதியாண்டின் காலகட்டத்தில் 15.07 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கு இந்த நிதியாண்டில் 23.56 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் இலக்கில் 74 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு எம் அங்கமுத்து, விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம் என்று கூறினார். இதன் மூலம் தரமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887545
----
AP/PLM/KPG/GK
(रिलीज़ आईडी: 1887622)
आगंतुक पटल : 189