கூட்டுறவு அமைச்சகம்
கர்நாடகாவின் மாண்டியாவில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பால் பண்ணையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்துவைத்தார்
Posted On:
30 DEC 2022 4:33PM by PIB Chennai
கர்நாடகாவின் மாண்டியாவில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பால் பண்ணையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர். கூட்டுறவுத்துறையை தனியாகப் பிரித்து புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்ததாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இது விவசாயிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திரு அமித் ஷா கூறினார்.
கர்நாடகாவில் ரூ.2ஈ600 கோடி மதிப்பில் இன்று திறக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய பால்பண்ணை நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பாலைக் கையாளக் கூடிய திறன் கொண்டது என்றும் இது 14 லட்சம் லிட்டர் அளவுக்கு கையாளும் திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் கர்நாடகாவில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
குஜராத்தில் வெண்மைப் புரட்சி, அமுல் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய பால் மேம்பாட்டு வாரியமும், கூட்டுறவு அமைச்சகமும் இணைந்து அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆரம்ப பால் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் நாடு முழுவதும் 2 லட்சம் ஆரம்ப பால் நிலையங்கள் நிறுவப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வெண்மைப் புரட்சியுடன் பால் உற்பத்தியாளர்களை இணைப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய பால்பொருட்கள் ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார். குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக செயலாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கர்நாகட முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் திரு தேவே கவுடா, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-----
AP/PLM/KPG/GK
(Release ID: 1887613)
Visitor Counter : 151