பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
எதிர்கால பொறியாளர் திட்டத்திற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அமேசானுடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
28 DEC 2022 4:20PM by PIB Chennai
எதிர்கால பொறியாளர் திட்டத்திற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அமேசானுடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கம் நடத்துகிறது.
ஆறு மாநிலங்களில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியின் 54 ஆசிரியர்களுக்கு 28,29 டிசம்பர் 2022 ல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கமும், அமேசான் நிறுவனமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் டிஜிட்டல் கல்வித் துறையில் ஆசிரியர்களும், மாணவர்களும், அதிகாரம் பெறுவார்கள் என்று கூறினார்.
**************
SM/IR/RS/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1887087)
வருகையாளர் எண்ணிக்கை : 302