பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமங்களை நோக்கிய நிர்வாக வளர்ச்சி என்ற அடிப்படையிலான இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 53,80,000 பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன

Posted On: 27 DEC 2022 4:11PM by PIB Chennai

மத்திய அரசு டிசம்பர் 19ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நல்லாட்சி வாரமாக  கொண்டாடியது. இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்ததுடன் இந்த வாரத்தின் ஒரு பகுதியாக கிராமங்களை நோக்கிய நிர்வாக வளர்ச்சி என்ற அடிப்படையிலான இயக்கம் கடைப்பிடிக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

நாடு தழுவிய இந்த இயக்கத்தை டிசம்பர் 19-ம் தேதி மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் மூலம் 53,80,000 பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. டிசம்பர் 23-ம் தேதி 768 மாவட்ட அளவிலான பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன.

இந்த கிராமங்களை நோக்கிய நிர்வாக வளர்ச்சி என்ற அடிப்படையிலான இயக்கத்திற்கு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். மத்திய பொது மக்கள் குறைதீர்க்கும் அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு தமது அறிக்கையில் இதுபோன்ற இயக்கங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

**************

SM/PLM/KPG/RJ


(Release ID: 1886932) Visitor Counter : 188