எரிசக்தி அமைச்சகம்

2022-ம் ஆண்டில் மின்சார அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 27 DEC 2022 3:57PM by PIB Chennai

மின்சார விதிகள் 2022 (தாமதத்துக்கு கூடுதல் கட்டணம் மற்றும் அது தொடர்பான விஷயங்கள்) மின்சாரத்துறை நிதி ரீதியில் வலுவாக செயல்பட உதவும் மின்சார விநியோக நிறுவனங்கள், மின்சார நுகர்வோர், உற்பத்தி நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குகிறது.

 ரூ.26,546 கோடி அளவிலான மொத்த நிலுவைத்தொகைக்கு 5.8.2022 முதல் 21.9.2022 வரையிலான காலகட்டத்தில் தீர்வு காணப்பட்டது.

பசுமை அணுகல் விதிகள், திறந்தநிலை அணுகலுக்கான வரம்பை ஒரு மெகாவாட்டில் இருந்து 100 கிலோ வாட்டாக குறைக்கிறது. இதனால் சிறிய அளவில் நுகரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.

மின்சார அமைச்சகம், மின்சார விதிகள் 2020-ஐ பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள மின்சார நடைமுறைகள் நுகர்வோருக்கு சேவை புரியவும், நுகர்வோர் தரமான மின்சாரம் மற்றும் நம்பகமான சேவைகளை பெறுவதற்கான உரிமைகளுக்கும் இது வகை செய்கிறது.

ஆயிரம் மெகாவாட் பேட்டரி மின்சார சேமிப்பு சிஸ்டம் (பிஎஸ்எஸ்) ஏல வழிகாட்டுதல்கள், வெளிப்படையான ஏல நடைமுறையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இதுவரை ஆர்டிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் 17,34,39,869 ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள், 49,02,755 டிடி மீட்டர்கள், 168085 ஃபீடர் மீட்டர்கள், நாடு முழுவதும் 23 மாநிலங்கள் / 40 விநியோக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.115493.79 கோடி செலவில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் சுமார் 83,887 மெட்ரிக்டன் உயிரி எரிபொருள் பசுமை எரிசக்தியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. (31 அக்டோபர் வரை) . நிலக்கரியுடன் இணை எரிபொருளாக இதனை 39 டிபிபிக்கள் நாடு முழுவதும் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இந்தியாவுக்கும், மாலத்தீவுகளுக்கும் இடையே லட்சத்தீவுகள் வழியாக மேற்கொள்ளப்படும் இணைப்புக்கான தொழில்நுட்ப விதிமுறைகளை ஆய்வு செய்வதற்காக மாலத்தீவுகளுக்கு இந்திய தொழில்நுட்ப குழு சென்றது.

2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட்டுக்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை ஒருங்கிணைப்பதற்கான ஸ்டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய உயர் மட்டக்குழுவை மின்சார அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுவரை 36.86 கோடிக்கும் அதிகமான எல்இடி பல்புகள், 72.18 லட்சம் எல்இடி டியூப் லைட்டுகள், 23.59 லட்சம் எரிசக்தி சேமிப்பு மின்விசிறிகள் ஆகியவை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 48.39 பில்லியன் கிலோவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இதனால் நுகர்வோரின் மின்சார கட்டணங்கள் ஆண்டுக்கு ரூ.19,332 கோடி அளவுக்கு சேமிக்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய தெருவிளக்குகள் திட்டத்தை தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் ஏற்கனவே இருந்த தெருவிளக்குகளுக்கு பதிலாக மின்சார சேமிப்பு திறன் கொண்ட எல்இடி தெருவிளக்குகளை அமைக்க இந்த திட்டம் வகைசெய்கிறது.

நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கிராமப் பஞ்சாயத்துகளில் 1.26 கோடிக்கும் அதிகமான எல்இடி தெரு விளக்குகளை இஇஎஸ்எல் நிறுவனம் அமைத்துள்ளது.  இதன் மூலம் 1416 மெகாவாட் ஆண்டுக்கு சேமிக்கப்படுவதுடன், 5.85 மில்லியன்  டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வும் குறைக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.5947 கோடி அளவுக்கு மின்சார கட்டணத்துக்கு செலவிடும் தொகை மிச்சமாகிறது.

**************

SM/PKV/AG/RJ



(Release ID: 1886904) Visitor Counter : 236