சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்ட விவகாரங்கள் துறையின் 2022-ம் ஆண்டின் செயல்பாடுகள் பற்றிய கண்ணோட்டம்
Posted On:
26 DEC 2022 12:48PM by PIB Chennai
அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டச் செயலர்களின் மாநாடு, இந்திய சட்ட அமைப்பைப் பற்றிய பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு பொதுவான மன்றத்தை வழங்கும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்றது.
சட்ட விவகாரத் துறையின் முதன்மைப் பணியானது, மத்திய அரசின் பரிந்துரைக்கும் அமைச்சகம்/துறைக்கு சட்ட ஆலோசகர் என்ற தகுதியில் ஆலோசனை வழங்குவதாகும். இந்த ஆண்டு துறையின் சட்ட ஆலோசனைக்காக பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளிலிருந்து 5417 குறிப்புகளைப் பெற்றுள்ளது.
மத்திய ஏஜென்சி பிரிவு (சிஏஎஸ்) - மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள்/துறைகள், தேசிய தலைநகர் பிரதேசம், யூனியன் பிரதேசங்கள், இந்தியக் கட்டுப்பாட்டாளர் & ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய முகமைப் பிரிவு வழக்குகளை நடத்துகிறது. இந்த ஆண்டு மொத்தம் 92936 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 75449 வழக்குகள் தீர்க்கப்பட்டு 17436 வழக்குகள் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளன.
மத்தியஸ்த மசோதா, 2021 ஐ நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வணிக நீதிமன்றங்கள் சட்டம், 2015, வணிக நீதிமன்றங்கள், வணிக மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், வணிகப் பிரிவு மற்றும் உயர் நீதிமன்றங்களில் உள்ள வணிக மேல்முறையீட்டுப் பிரிவு ஆகியவை குறிப்பிட்ட மதிப்புள்ள வணிக தகராறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களை தீர்ப்பதற்கு வழங்குகிறது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிபதிகளின் நீதிமன்றங்கள் முறையே ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கான வணிக நீதிமன்றங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
சட்டக் கல்வி தொடர்பாக 30.04.2022 அன்று முதலமைச்சர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், நீதி அமைப்பில் தாமதத்தை குறைக்கவும்,நீதித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,சட்டப் பல்கலைக்கழகத்தில் பிளாக்செயின்கள், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, மின்னணு கண்டுபிடிப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் உயிரியல் நெறிமுறைகள் போன்ற தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு,சட்டங்களை எளிமைப்படுத்துதல்,உள்ளூர் மொழிகளின் பயன்பாடு,காலாவதியான மற்றும் பழமையான சட்டங்களை ரத்து செய்தல்,சிறிய குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளின் விடுதலை, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்தம் ஆகியவை பற்றி பிரதமர் உரையாற்றினார்.
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் - 2022 ஆம் ஆண்டில், தீர்ப்பாயம் மொத்தம் 36368 மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தது மற்றும் 39107 தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த 12வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ உரை நிகழ்த்தினார். டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையே அரசியலமைப்பின் கொள்கைகள் காலத்தின் சோதனையாக நிற்பதற்குக் காரணம் என்றும், வழக்கற்றுப் போன சட்டங்களை மறுஆய்வு செய்தல், நீதியை எளிதாக்குவதற்கு உள்ளூர் மொழியை சட்ட அமைப்பில் இணைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளை அரசு எவ்வாறு மேற்கொண்டு வருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
**************
(Release ID: 1886638)
SM/PKV/RJ/KRS
(Release ID: 1886695)
Visitor Counter : 321