குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குளிர்கால தங்கலுக்காக செகந்திராபாத் குடியரசு தலைவர் நிலையத்திற்கு குடியரசு தலைவர் பயணம்

Posted On: 25 DEC 2022 7:19PM by PIB Chennai

குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாளை  முதல் 30ந்தேதி  வரை குடியரசு தலைவர் நிலையத்தில் குளிர்கால தங்கலுக்காக தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்கிறார்.

 26ந்தேதி  அன்று, குடியரசுத் தலைவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்குச் சென்று, மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின் கீழ் ஸ்ரீசைலம் கோயிலின் மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் குடியரசு தலைவர்  நிலையத்திற்குச் செல்வதற்கு முன் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரத்தையும் பார்வையிடுவார்.

27ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்வி சங்கத்தின்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். அதே நாளில், அவர் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கு சென்று இந்திய போலீஸ் சேவையின் பயிற்சியாளர்களிடம்  உரையாற்றுவார். ஹைதராபாத்தில் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தின் வைட் பிளேட் மில்லையும் அவர் திறந்து வைக்கிறார்.

 28ந்தேதி அன்று, குடியரசுத் தலைவர் பத்ராசலம் ஸ்ரீ சீத்தாராம சந்திர சுவாமிவாரி தேவஸ்தானத்திற்குச் சென்று பிரசாத் திட்டத்தின் கீழ் பத்ராசலம் கோயிலில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அடிக்கல் நாட்டுவார். தெலுங்கானாவின் வனவாசி கல்யாண் பரிஷத் ஏற்பாடு செய்த சம்மக்கா சாரலம்மா ஜஞ்சதி பூஜாரி சம்மேளனை அவர் தொடங்கி வைப்பார், மேலும் தெலுங்கானாவின் கோமரம் பீம் ஆசிபாபாத் மற்றும் மஹபூபாபாத் மாவட்டங்களில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளையும் அவர் துவக்குவார். அதே நாளில், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், ராமப்பா கோயிலில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காமேஸ்வராலய கோயிலின் புனரமைப்புக்கான அடிக்கல்லை நாட்டுவார்.

 ஹைதராபாத்தில் உள்ள பி.எம்.மலானி நர்சிங் கல்லூரி மற்றும் சுமன் ஜூனியர் கல்லூரியின் மகிளா தக்ஷதா சமிதியின் ஜி. நாராயணம்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (மகளிர் ) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் குடியரசுத் தலைவர் 29ந்தேதியன்று உரையாடுவார்.. அன்றைய தினம், ஷம்ஷாபாத் ஸ்ரீராம்நகரில் உள்ள சமத்துவ சிலையை அவர் பார்வையிடுகிறார்.

டிசம்பர் 30 அன்று, குடியரசுத் தலைவர் தில்லி திரும்புவதற்கு முன்,  வீர் நாரிகள் மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு மதிய விருந்து அளிப்பார்.

 

**************

SM/PKV/DL


(Release ID: 1886553)