பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறையானது முக்கியத்துவம் பெற்று மத்திய அரசின் மனித வள ஆதார மையமாக உருவெடுத்து வருகிறது : மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
25 DEC 2022 5:34PM by PIB Chennai
மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு);
புவி அறிவியல் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம்;
பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறையானது முக்கியத்துவம் பெற்று மத்திய அரசின் மனித வள ஆதார மையமாக உருவெடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சிஎஸ்ஓஐ ஆடிட்டோரியத்தில் நல்லாட்சி வார நிகழ்வின் நிறைவாக (டிசம்பர் 19-25, 2022) தலைமை உரையை நிகழ்த்திய டாக்டர் ஜிதேந்திர சிங், திரு மோடி அரசின் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் சேவைகளுக்காக "அணுகுவதற்கு சாதகமான அமைச்சகமாக" உருவெடுத்துள்ளது என்றார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 8 ஆண்டுகளில் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி, ஓய்வூதியத் துறை ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதிக வெளிப்படைத்தன்மையுடன், மிகுந்த பொறுப்புடன், தொழில்நுட்ப வசதியுடன் சிறப்பாக செயல்பட்டு, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கான மந்திரச் சொல்லான "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை " பின்பற்றி வருகிறது.
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய விதத்தில் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது என்று கூறினார். மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவப் பொறுப்பு,
வரும் ஆண்டுகளில் உலகளாவிய சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு ஏற்பட முனைப்புடன் செயல்படும் என்றார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான கர்மயோகி இயக்கம் தற்போது மேம்பட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தற்போது மொபைல் செயலி ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார். இரண்டாவது வேலைவாய்ப்பு விழாவின் போது (2022, நவம்பர் 22) அன்று பிரதமர் திரு மோடி, புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் என்றும் இதனைத் தொடர்ந்து, கர்மயோகி இயக்கமும் அடுத்த தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
**************
SM/GS/DL
(Release ID: 1886539)
Visitor Counter : 196