குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 DEC 2022 4:31PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
"புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து அன்பு, பரிவு மற்றும் கருணை ஆகியவற்றின் வழியை நமக்குக் காட்டியுள்ளார். இது நமது வாழ்க்கையை நல்லொழுக்கம் உள்ளதாக்குகிறது. அத்துடன் சமூகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறது. இது உலகில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாம், இணக்கமான, சகிப்புத்தன்மையுடன் கூடிய மற்றும் அமைதியான சமுதாயத்திற்காகப் பாடுபடுவோம்."
இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
**************
SM/PLM/DL
(रिलीज़ आईडी: 1886326)
आगंतुक पटल : 200