அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கம்போடியாவில் 3-வது ஆசியான் இந்தியா புதுமைக்கண்டுபிடிப்புகள் போட்டியில், இந்தியாவைச்சேர்ந்த புதுமை கண்டுபிடிப்பாளர் வெற்றி பெற்றதன் மூலம் நாடு பெருமை அடைகிறது

Posted On: 22 DEC 2022 9:31AM by PIB Chennai

நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றியமைக்கப்பட்ட கால் உபகரணம்  கண்டுபிடிப்பிற்காக 3-வது ஆசியான் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஷாலினி குமாரி முதல் பரிசு பெற்றார். கம்போடியாவில் தொழில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர்  ஹல் செயிங்கெங்-மிடருந்து ஷாலினிகுமாரி பரிசு பெற்றார். முதல் பரிசு பெற்ற அவருக்கு 1,500 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கம்போடிய அரசின் தொழில்துறை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் துறை அமைச்சர் திரு கிட்டி சேத்தா பண்டித சம் பிரசித், போட்டியில் பங்கேற்போர்,  மற்றவர்களின்  அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மூன்று நாள் நடைபெற்ற கண்காட்சியில், 9 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 தொழில்நுட்பங்கள்  காட்சிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

3-வது ஆசியான் இந்தியா புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டுக்கு இடையே, ஆசியான் உறுப்பு நாடுகளின் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டமும் கம்போடியாவில் நடைபெற்றது.

**************

AP/IR/KPG/GK


(Release ID: 1885645) Visitor Counter : 185