அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
காவலூர் வைனு பாப்பு ஆய்வுக்கூடத்தின் 40 அங்குலம் தொலைநோக்கியின் 50-ஆம் ஆண்டு கொண்டாட்டம்
Posted On:
21 DEC 2022 9:01AM by PIB Chennai
பல்வேறு நட்சத்திரங்களைக் கண்டுபிடித்த தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள காவலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு ஆய்வுக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள 40 அங்குல தொலைநோக்கியின் 50-ஆம் ஆண்டு கொண்டாட்டம் கடந்த 15-16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வளையங்கள் இருப்பதையும். அதன் துணைக்கோளையும், கண்டுபிடித்து வானசாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகித்த பேராசிரியர் வைனு பாப்பு இந்த தொலைநோக்கியை அமைத்தார். இந்தத் தொலைநோக்கி மூலம் பல நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் ஒரு உறுப்பு நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கீழ் ஆய்வகத்தின் தொலைநோக்கி செயல்பட்டு வருகிறது. இந்த தொலைநோக்கி தற்போதும் பயன்படுவதாக அமைந்துள்ளது.
1960-ம் ஆண்டுகளில் நவீன வானியலை ஆராய்ச்சி செய்வதற்கு உயர்தரமான ஆய்வகம் இந்தியாவுக்கு தேவையாக இருந்தபோது பேராசிரியர் வைனு பாப்பு காவலூரை ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு தேர்வு செய்தார். காவலூரில் வான்வெளி சிறப்பாக இருந்ததும், தென்பகுதியில் அமைந்துள்ள அந்த இடம் வடக்கு மற்றும் தெற்கு வானத்தைக் காண்பதற்கு ஏற்றவகையில் இருந்தது. ஆய்வகம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து 40 அங்குலத் தொலைநோக்கியை வாங்கி 1972-ஆம் ஆண்டில் அது நிறுவப்பட்டடது.
இதன் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் பெங்களுருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவன வளாகத்தில் ஒரு நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக 16-ஆம் தேதி காவலூரில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வானியல் வல்லுநர்கள் பொறியாளர்கள் தொலைநோக்கு உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தொடக்கப்பள்ளி சிறார்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வென்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885269
**********
AP/PKV/RJ/GK
(Release ID: 1885318)
Visitor Counter : 325