ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தமிழகத்தில் 250 ஆயுஷ் மையங்கள் இயங்குகின்றன; மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 20 DEC 2022 4:01PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆயுஷ் இயக்கம், ஆயுஷ் நல மையங்களை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் கோரிக்கையின் படி 9068 ஆயுஷ் நல மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன. இதில் 4830 மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் தமிழகதிற்க்கு 350 மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 250 மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இதைப்போல புதுச்சேரியில் 4 மையஙகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இத்தகவலை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில்  எழுத்து மூலம் அற்வித்த பதில் தெரிவித்துள்ளார்.

************


(Release ID: 1885195)
Read this release in: English , Urdu , Marathi , Telugu