பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் 2022: நிலுவையில் உள்ள தத்தெடுப்பு ஆணைகளின் எண்ணிக்கை சரிவு

Posted On: 20 DEC 2022 12:46PM by PIB Chennai

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.

குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே சமூக-கலாச்சார பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், குழந்தையும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. 10.11.2022 முதல் இந்த தொகுதி செயல்பாட்டிற்கு வந்தது. அப்போதிலிருந்து இந்தியாவில் வசிக்கும் 2745 பேர், வெளிநாடுகளில் வசிக்கும் 13 இந்தியர்கள், வெளிநாட்டுக் குடியுரிமைப் பெற்ற 15 இந்தியக் குடிமக்கள், 38 வெளிநாட்டவர்கள் புதிய தொகுப்பில் பதிவு செய்திருப்பதோடு, 5 வழக்குகளும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தத்தெடுப்புகளை ஊக்குவிப்பதற்காக குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் 2022 இல் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி குறிப்பிட்ட சுழற்சிக்குள் தங்கள் குடும்பங்களைக் கண்டறிய முடியாத குழந்தைகள் தற்போது இந்தியாவில் வசிப்பவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டுக் குடியுரிமைப் பெற்ற இந்திய மக்கள் மற்றும் குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை 47 குழந்தைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தத்தெடுப்பு ஆணைகள், இணையதளம் வாயிலாக வெளியிடப்படுகின்றன. நாட்டின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தத்தெடுப்பு ஆணை வேகமாகவும், வெளிப்படையாகவும் அளிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885014

**************

AP/RB/KRS


(Release ID: 1885043)