பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள்
Posted On:
19 DEC 2022 6:00PM by PIB Chennai
எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து எத்தனாலை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எத்தனால் விநியோக ஆண்டான 2021-22-ம் ஆண்டில் பெட்ரோலுடன் சராசரியாக பத்து சதவீத எத்தனாலைக் கலக்கும் பணிகளில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் வெற்றி கண்டுள்ளன. அதே நேரத்தில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனாலைக் கலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளிதுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
**************
(Release ID: 1884864)
AP/ES/KPG/KRS
(Release ID: 1884933)