உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷில்லாங்கில் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் உரை


வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டக் கூட்டம்

கிழக்கை நோக்கும் கொள்கை- கிழக்குக்காக உழைக்கும் கொள்கையாக மாறி, வடகிழக்குக்காக வேகமாக பணியாற்று என்பதில் இருந்து, வடகிழக்கிற்காக முதலில் பணியாற்று என்ற கொள்கையாக தற்போது அரசு மாற்றியிருக்கிறது

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான 8 அடிப்படைத் தூண்கள் குறித்து பிரதமர் பேச்சு

வடகிழக்கு மண்டலங்களின் கலாச்சாரம் மற்றும் வலிமையைப் பறைசாற்றும் வாய்ப்பை ஜி20 கூட்டங்கள் அளித்திருக்கின்றன- பிரதமர்

Posted On: 18 DEC 2022 4:10PM by PIB Chennai

இன்று காலை ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 1972ம் ஆண்டு முறைப்படித் தொடங்கப்பட்ட  வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்தையொட்டி இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டில்வடகிழக்கு  கவுன்சிலின் பங்களிப்பு குறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர்நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், வடகிழக்கு கவுன்சில் தனது பொன்விழாவைக் கொண்டாடுவதாகக் கூறினார். வடகிழக்கு மண்டலத்தின்  8 மாநிலங்களை, அஷ்ட லட்சுமிகளுடன் ஒப்பிட்ட அவர்,   அமைதி, மின்சாரம், சுற்றுலா, 5ஜி இணைப்பு, கலாச்சாரம், இயற்கை வேளாண்மை, விளையாட்டு, வலிமை ஆகிய, நாட்டின் வளர்ச்சிக்கான  8 தூண்களுக்காக அரசு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக உள்ள வடகிழக்கு   மாநிலங்கள், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான மையமாக மாறியிருப்பதாகத் தெரிவித்தார். இந்த மாநிலங்களை பலப்படுத்த ஏதுவாக, இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மற்றும் அகர்தலா- ஆகுரா ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.  கிழக்கு நோக்கும் கொள்கை, கிழக்குக்காக உழைக்கும் கொள்கையாக மாறி, தற்போது, வடகிழக்குக்காக வேகமாக பணியாற்று என்பதில் இருந்து, முதலில் வடகிழக்கிற்காகப் பணியாற்று என்ற கொள்கையாக மாறியிருப்பதை எடுத்துரைத்தார். வடகிழக்கு மண்டலங்களில் அமைதியை ஏற்படுத்த அமைதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையும்குறிப்பாக மாநிலங்களுக்கு இடையே எல்லை ஒப்பந்தங்கள்  போட்டப்பட்டிருப்பதால், தீவிரவாத சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

வடகிழக்கு மாநிலங்கள் தற்போது நீர்மின்சாரத்தின்  சக்திமையங்களாக மாறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இது  அவற்றை மின் உபரி மாநிலங்களாக மாற்றும் என்றும், அவ்வாறு மாற்றுவது, தொழில்சாலைகள் உருவாக்கத்திற்கும், அதிகளவிலான வேலைவாய்ப்புக்கும் வழிவகுக்கும் எனவும்  தெரிவித்தார்.   வடகிழக்கு மண்டலத்தின் கலாச்சாரம்  மற்றும் இயற்கை அமைப்பு, உலக நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்ப்பதாக இருப்பதால்சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியம்  என்றும் கூறினார். 100 பல்கலைக்கழகங்களின் மாணவர்களைத் தேர்வுசெய்து, இந்த மண்டலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவைப்பதன்மூலம், அவர்கள், இந்த மண்டலத்தின் தூதர்களாக மாறுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பல சகாப்தங்களாக நிலுவையில் இருந்த பாலப்பணிகள், தற்போது சாலை இணைப்பை மேம்படுத்தும் வகையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த மண்டலத்தில் 9-ஆக இருந்த விமானநிலையங்களின் எண்ணிக்கை 16-ஆகவும்இந்த மண்டலத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 900-த்தில் இருந்து 1,900 மாக அதிகரித்திருப்பதாகவும் பிரதமர்  பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு வடகிழக்கு மாநிலங்கள், முதன்முறையாக ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மாநிலங்களில் நீர்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.  உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பிஎம்-டிவைன் (PM-DevINE) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் நல்ல பலனடைந்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆப்டிகல் ஃபைபர் நெட்ஒர்க் மூலம் வடகிழக்கு மாநிலங்களில், டிஜிட்டல் – இணைப்பை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். 5ஜி சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளில் தற்சார்பு அடைவதுஇந்த மண்டலத்தில் சுற்றுச்சூழல், சேவை உள்ளிட்ட இதர துறை சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின்  வளர்ச்சிக்கு உதவும் என்றார். வடகிழக்கு மாநிலங்களைப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மட்டுமல்லாமல், கலாச்சார வளர்ச்சியின் மையமாகவும் மாற்ற அரசு உறுதி பூண்டிருக்கிறது என்றார் பிரதமர்.

 

வடகிழக்கு மண்டலத்தில் இயற்கை வேளாண்மைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இயற்கை வேளாண்மையில், இந்த மாநிலங்கள்  முக்கியப்பங்கு  வகிக்க முடியும் என்றும் அவர் கூறினார். கிருஷி உடான் மூலம் இந்த மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைபொருட்களைநாடு முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் தற்போது அனுப்ப முடிகிறது என்றார்.  மேற்கொள்ளப்பட்டு வரும், சமையல் எண்ணெய்-பனை எண்ணெய் தேசிய இயக்கத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.  புவியியல் சவால்களை  முறியடித்து விவசாயிகள், தங்கள் விளைபொருட்களைச்  சந்தைக்குக் கொண்டு செல்ல  ட்ரோன்கள்  எவ்வாறு உதவுகின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை  அமைத்திருப்பதன் மூலம்இந்த மண்டலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிக்க அரசு முன்வந்திருப்பதாக அவர் கூறினார்.   இந்த மண்டலத்தில்  உள்ள 8 மாநிலங்களில்200க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு (டிஓபிஎஸ்) திட்டன் கீழ், இந்த மண்டலத்தைச் சேர்ந்த பல தடகள வீரர்-வீராங்கனைகள் பலனடைந்து வருவதைவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை, இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், இது சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளைச் சேர்ந்த  மக்கள்  வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தருவதை அவர்  சுட்டிக்காட்டினார்.   இதன்மூலம், இந்த மண்டலத்தின் இயற்கை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உலகுக்கு பறைசாற்ற அருமையான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

**************

SM/ES/DL


(Release ID: 1884621) Visitor Counter : 163