மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளி மாணவர்களுக்கான தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலை மறுவடிவமைப்பது குறித்த ஒரு நாள் ஆலோசனை கருத்தரங்குக்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 18 DEC 2022 2:11PM by PIB Chennai

பள்ளிக் கல்வி துறை செயலர் திரு சஞ்சய் குமார்திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பயிற்சி இயக்குநரகம் , பிஎஸ்எஸ்சிஐவிஇ, போபால், என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிவிஇடி, ஏஐசிடிஇ போன்றவற்றுடன் ஆலோசனை பயிலரங்கு மற்றும் இரண்டு வட்டமேஜை உரையாடல்களுக்குத் தலைமை தாங்கினார். பயிலரங்கு மற்றும் வட்டமேசை உரையாடலில்  சிவில் சமூக அமைப்புகள், மாநிலக் கல்வித் துறை, பயிற்சியாளர்கள், தொழிற்கல்வி, தொழில் ஆலோசனைத் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுடன், தற்போதைய மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாணவப் பருவத்தில் முறையான தொழில் பயிற்சி மூலம் பணியாளர்களை திறன்படுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று தலைமை உரையில், பள்ளிக் கல்வி துறை செயலர் திரு சஞ்சய் குமார் வலியுறுத்தினார்.  இது போன்ற சிக்கல்களை புதிய கல்விக் கொள்கை  கண்டறிந்துள்ளதுடன்தீர்வு நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது என்று அவர்  கூறினார்.

புதிய கல்விக் கொள்கையின்படி, அடுத்த தசாப்தத்தில் அனைத்து பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தொழிற்கல்வி படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று திரு. குமார் சுட்டிக்காட்டினார். திறன் இடைவெளி பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் வாய்ப்புகளின் அடிப்படையில் தொழில்கள் மற்றும் படிப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.

மறுவடிவமைத்தல், தொழிற்கல்வி தொகுதிகளை புதுப்பித்தல் போன்றவை தொடர்பான பல்வேறு யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. வாழ்க்கைத் திறன்களின் முக்கியத்துவம், தகவல் சமச்சீரற்ற தொழிற்கல்வி பள்ளியை உயர்த்துதல், தொழிற்கல்விக்கு பாலினக் கண்ணோட்டத்தை வழங்குதல் போன்றவை இந்த விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிட்டிக்ஸ், ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன், சைபர் செக்யூரிட்டி போன்ற திறன்களைக் கொண்ட மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.  இதனால் தொழில் பட்டதாரிகள் உலகப் பொருளாதாரத்தில் போட்டியிட முடியும்.

**************

SM/PKV/DL


(Release ID: 1884562)