சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

4 கோடிக்கும் மேற்பட்டோரின் சுகாதார ஆவணங்கள், ABDM திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் இணைத்து, டிஜிட்டல்மயமாக்கல்

Posted On: 17 DEC 2022 2:27PM by PIB Chennai

நாட்டில் டிஜிட்டல் சுகாதாரச் சூழலை உருவாக்க ஏதுவாக, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (ஏடிபிஎம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்  திட்டத்தின் கீழ்4 கோடிக்கும் அதிகமானோரின் டிஜிட்டல் சுகாதார ஆவணங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை, 29 கோடிக்கும் அதிகமான குடிமக்கள், தங்கள் தனித்துவம் வாய்ந்த  ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளை ஊருவாக்கியுள்ளனர்.

அவர்களது சுகாதார ஆவணங்கள்  ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளுடன்  டிஜிட்டல் இணைப்பு செய்யப்பட்டு, அவர்களே தங்கள் ஆவணங்களை நிர்வகிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து குடிமக்கள் தங்கள் சுகாதார ஆவணங்களை, ஏடிபிஎம்-மில் பதிவு செய்து கொண்ட மருத்துவ சேவை அளிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

சுகாதார ஆவணங்களை டிஜிட்டல்மயப்படுத்துதல் ஏடிபிஎம்-மின்  பங்கு குறித்து பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எஸ். ஷர்மாதேசிய சுகாதார ஆணையம்பல்வேறுபட்ட பங்குதாரர்கள் டிஜிட்டல் சுகாதார சேவைகள் மூலம் பயனடைவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட சுகாதார  சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு  ஊக்கத்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

*******

AP/ES/DL(Release ID: 1884424) Visitor Counter : 142