குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய புள்ளியியல் சேவையில் பயிற்சி அலுவலர்கள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்
Posted On:
16 DEC 2022 2:39PM by PIB Chennai
இந்திய புள்ளியியல் சேவையின் பயிற்சி அலுவலர்கள் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், சரியான புள்ளியியல் தரவு இல்லாமல் கொள்கை வகுப்பு மற்றும் செயல்பாடு சிறப்பாக இருக்காது என்று கூறினார். தரவுகளும், தகவல்களும் எல்லையில்லாமல் குவிந்துகொண்டிருக்கும் தற்போதைய யுகத்தில், புள்ளியியலின் பங்கும் முக்கியத்துவமும் அபரிதமாக அதிகரித்து வருகிறது. ஒரு அளவுகோலில் இந்தியாவின் தரம் பற்றி குறிப்பிடவேண்டுமானால் அதற்கு புள்ளியியல் அவசியமாகும். அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று கூறுவது ஒரு புள்ளியியலின் அடிப்படையில்தான்.
இந்தியா சமூக பொருளாதார மாற்றத்தின் புதிய கட்டத்தில் உள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், அரசு செயல்படுவதில் திறனையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவருகின்றன. தரவுகள் குவிந்து வரும் இத்தகைய முன்முயற்சிகள், அரசுக்கு சிறப்பான முடிவுகளை செயல்திறனோடு எடுக்க உதவுகின்றன.
அதிகாரிகள் தங்களது கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், உண்மையான முறையிலும், செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத்தலைவர், அவர்களது பங்களிப்பு இந்தியாவை மிக முன்னேற்றமான பாதையில் கொண்டு செல்லும் என்று குறிப்பிட்டார். தகவல் மற்றும் தரவு பகுப்பாய்வுகள், கொள்கைகளை வகிப்பதிலும் அமல்படுத்துவதிலும் வகை செய்வதுடன் வளர்ச்சிப் பயணத்தில் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
**************
(Release ID: 1884078)
SM/PKV/KPG/KRS
(Release ID: 1884175)
Visitor Counter : 158