மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையின் செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
15 DEC 2022 5:29PM by PIB Chennai
இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் சமூக மாற்றங்களை சிறப்பாக ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கியிருப்பதுடன், அறிவுசார் பொருளாதார அணுகுமுறையை உறுதி செய்துள்ளது.
இந்த ஆண்டில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயல்பாடுகளால் எட்டப்பட்ட சில சாதனைகள:
- நாடு முழுவதும் தனித்துவ அடையாள ஆணையம் 88 ஆதார் சேவை மையங்களை 72 நகரங்களில் ஏற்படுத்தியுள்ளது.
- இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரம் பொதுச் சேவை மையங்கள், அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 4 லட்சத்து 37 ஆயிரம் மையங்கள், கிராம ஊராட்சி அளவில் செயல்பட்டு வருகின்றன.
- கிளவுட் எனப்படும் மேகக் கணினி அடிப்படையில் உருவாக்கப்பட்ட டிஜி லாக்கர் தளத்தில் பொதுமக்கள் தங்களது ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் சேமிக்கும் வகையில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
- கடந்த நிதியாண்டில் மொத்த மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 5554 கோடியாக அதிகரித்துள்ளது.
- உள்நாட்டு மின்னணுப் பொருட்கள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-17ம் நிதியாண்டில் 3லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டில் 6லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அது அதிகரித்துள்ளது.
- உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமான ஆதாரின் கீழ் 2022 நவம்பர் 31 வரை 129 கோடியே 41 லட்சம் ஆதார் வழங்கப்பட்டுள்ளன.
- மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- அடுத்த தலைமுறை தொழில் பாதுகாப்பு திட்டத்தின் (என்ஜிஐஎஸ்) கீழ் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு ஆதரவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- இந்திய மென்பொருட்கள் தொழில்நுட்ப பூங்காக்ககள் மென்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
- மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தின் உற்பத்தியை உள்நாட்டிலேயே அதிகளவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
- இணையதள பாதுகாப்புக்காக தேசிய உயர்திறன் சைபர் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நடைமுறைகளுக்கு வேகமாக மாறிவரும் நாடாக இந்தியாக திகழ்கிறது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளதோடு, மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை அடைவதற்கான சூழலையும் மேம்படுத்தியுள்ளன.
**************
AP/PLM/RS/KPG
(Release ID: 1883905)
Visitor Counter : 297