கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார அமைச்சகத்தின் 2022 ம் ஆண்டு செயல்பாடுகள் தொடர்பான கண்ணோட்டம்
நாடு முழுவதும் 1,36,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Posted On:
14 DEC 2022 2:53PM by PIB Chennai
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் எனப்படும் விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்பது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை முன்னிட்டு, மக்கள், கலாச்சாரம் மற்றும் பல்வேறு சாதனைகளின் வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூர்வதற்கும் மேற்கோள்ளப்பட்ட சிறந்த முன்முயற்சியாகும்.
இந்த இயக்கத்தின் கீழ் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான முயற்சிகள் கலாசார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லம் தோறும் மூவண்ண தேசியக் கூட ஏற்றுதல் , வந்தேபாரதம், கலாஞ்சலி போன்ற பல மாபெரும் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் 1,36,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் அருங்காட்சியகம் புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 23 கோடி வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பான செல்பி புகைப்படத்தை 6 கோடி பேர் பதிவு செய்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு, புத்த கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி 2022 ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு வரை 13 சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை 228 சிலைகள் மற்றும் விலைமதிப்பற்ற கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
குரு தேக் பகதூர் சிங்கின் 400 ஆவது ஆண்டு கொண்டாட்டம், விடுதலைப் போராட்ட வீரர் கல்லூரி சீதாராம ராஜுவின் 125 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம், ஸ்ரீ அரவிந்தரின் 150வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டம், மகாத்மா தான் காந்தியின் 24வது நினைவு தினம் அனுசரிப்பு, ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி, ராஜாராம் மோகன் ராயின் 250 ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.
ஹெலனிக் குடியரசு, டென்மார்க், பனாமா செனகல் போன்ற நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அருங்காட்சியகங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சிகள், தேசப் பிரிவினை துயர தினம் தொடர்பாக புகைப்படக் கண்காட்சி, விடுதலைப் போராட்டம் தொடர்பான புத்தகக் கண்காட்சி போன்றவையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.
சர்வதேச தாய்மொழித் தினத்தை முன்னிட்டு, ஒரே பாரதம் என்ற நிகழ்ச்சி கலாச்சார அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது.
பல்வேறு கோவில்களை பலதரப்பட்ட கோணங்களில் இணைய தளம் மூலமாக பார்க்கும் வசதியுடன் Temple 360 என்ற இணையதளம் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கப்பட்டது.
உலக இசை தினத்தை முன்னிட்டு ஜோதிர்கமய என்ற நிகழ்ச்சி, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு சிறப்பு நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
**************
(Release ID: 1883845)
Visitor Counter : 223