சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பாண்டில் (2021) செப்டம்பர் 9 வரை அதிகபட்சமாக பல்வேறு உயர்நீதி மன்றங்களில் 165 நீதிபதிகளை அரசு நியமித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 DEC 2022 2:23PM by PIB Chennai

உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகளாக நியமிப்பதற்காக 20 பேரை உச்சநீதிமன்றம்  கொலிஜியம் அமைப்பிற்கு அரசு அண்மையில் மீண்டும் பரிந்துரைத்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜூ மாநிலங்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். 9.12.2022 வரை 1108 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில் 727 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 331 (30%) நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன.  நிரப்பப்பட வேண்டிய 331 நீதிபதி பணியிடங்களில்  147 பேரை நியமிக்க உயர்நீதி மன்றங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நடைமுறைகள் அரசு மற்றும் உச்சநீதிமன்றம் கொலிஜியம் அமைப்பிற்கு இடையே நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் (2021) செப்டம்பர் 9 வரை அதிகபட்சமாக பல்வேறு உயர்நீதி மன்றங்களில்  165 நீதிபதிகளை அரசு நியமித்துள்ளது.

 

**************

AP/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1883801) வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Malayalam , English , Urdu