ரெயில்வே அமைச்சகம்

“தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தை" முன்னிட்டு “தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை” குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 15 DEC 2022 8:54AM by PIB Chennai

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி புதுதில்லியில் நேற்று (14.12.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், தேசிய எரிசக்தி திறன் புதுமைக் கண்டுபிடிப்புகள் விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் 2022-ம் ஆண்டுக்கான 9 தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளை இந்திய ரயில்வே பெற்றது.  மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தித் திறன் அமைப்பு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ரயில்வே நிலையங்கள் பிரிவில் எரிசக்தி சேமிப்பு நடைமுறைகளில் தென்மேற்கு ரயில்வே முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை வென்றது. முதல் பரிசு கச்சிகூடா ரயில் நிலையத்திற்கும், இரண்டாவது பரிசு குண்டக்கல் ரயில் நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.

கான்பூர் மத்திய ரயில் நிலையம், ராஜமுந்திரி ரயில் நிலையம், தெனாலி ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

கட்டிடங்கள் பிரிவில் வடமேற்கு ரயில்வேயின் அஜ்மீர் பட்டறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. 

**************

AP/IR/AG/RR



(Release ID: 1883659) Visitor Counter : 149