உள்துறை அமைச்சகம்

நிர்பயா நிதி

Posted On: 13 DEC 2022 3:32PM by PIB Chennai

2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும்  “நிர்பயா நிதியின்” கீழ் ரூ.98.86 கோடி நிதி உதவியை உள்துறை அமைச்சகம்  வழங்கியுள்ளது.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய புதிய மனிதக்கடத்தல் தடுப்பு அலகுகளை நிறுவ இது உதவும்.

இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் 'காவல்' மற்றும் 'பொது ஒழுங்கு' ஆகியவை 'மாநில-பட்டியல்' விஷயங்களாகும். எனவே, புலனாய்வு சேகரிப்பு, விசாரணை மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவை சட்டத்தின் தற்போதைய விதிகளின் கீழ் இதுபோன்ற விஷயங்களைக் கையாளத் தகுதியுள்ள அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது.

உள்துறை அமைச்சகம்,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது நீதித்துறை கலந்தாய்வுகள் மற்றும் மாநில அளவிலான மாநாடுகளை நடத்துவதற்கு வழக்கமான நிதி உதவியை வழங்குகிறது. அவை சட்ட அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரச்சினையில் தொடர்புடைய பிற அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மனிதக் கடத்தலை தடுக்கவும்,  மனிதக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கும்பல்களை அடையாளம் காணவும், அவர்களின் தொடர்புகள், முறைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகவும் 'உளவுத்துறை' மற்றும் 'கண்காணிப்பு' வழிமுறைகளை உருவாக்கலாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், குறிப்பாக ஆள் கடத்தல் வழக்குகளைக் கையாளும் காவல்துறை அதிகாரிகளுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு நடைமுறைச் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், நிர்வாக நடைமுறைகள், விசாரணையில் திறன்கள் பற்றிய அறிவு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா இதனைத் தெரிவித்தார்.

**************

AP/PKV/IDS

 

 (Release ID: 1883138) Visitor Counter : 302