கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலங்கரை விளக்க சுற்றுலாத் திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2022 12:30PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 65 கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். குஜராத் (13), தமிழ்நாடு (11), கேரளா (10), மகாராஷ்டிரா (5), கர்நாடகா (5), ஒடிசா (5), மேற்கு வங்கம் (3),அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (2), லட்சத்தீவுகள் (1), கோவா (1).

தமிழகத்தில் 11 கலங்கரை விளக்கங்கள் இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, கூத்தங்குழி, மணப்பாடு, கீழக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், மல்லிப்பட்டணம், கோடியக்கரை, நாகப்பட்டிணம், பூம்புகார், பழவேற்காடு போன்ற கலங்கரை விளக்கங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.

**************

AP/GS/AG/IDS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1882050) வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali , Odia , Malayalam