பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெட்ரோல் நிலையங்களில் உயிரி எரிபொருள் விற்பனை
Posted On:
08 DEC 2022 2:39PM by PIB Chennai
நாட்டில் இதுவரை உயிரி எரிபொருட்கள் விற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 90-ஆக உள்ளது. இ-100 விற்பனை நிலையங்கள் 3 செயல்பட்டு வருகின்றன.
இது தவிர எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றன.
எரிபொருட்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மாற்றியமைத்தது.
உயிரி எரிபொருட்கள் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை ஆகியவை மூலம் சேமிக்கப்படும் அந்நிய செலாவணி மதிப்புக் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும், 2022 நவம்பர் 15 வரை, பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாக சேமிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில்,எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி இதனைத் தெரிவித்துள்ளார்.
------
AP/PKV/KPG/IDS
(Release ID: 1881901)
Visitor Counter : 159