குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு இந்தியா தொகுப்பு சலுகை

Posted On: 08 DEC 2022 1:01PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பு சலுகையின் கீழ் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

  1. அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் கோடி பிணை இல்லாத கடன்கள்.
  2. எம்எஸ்எம்இ தன்னிறைவு இந்தியா நிதி மூலம் ரூ.50,000 கோடி பங்கு முதலீடு அளித்தல்.
  3. எம்எஸ்எம்இ-க்களுக்கான புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறை
  4. ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலக டெண்டர்கள் கிடையாது
  5. எளிதாக தொழில் நடத்தும் வகையில் எம்எஸ்எம்இ-க்களுக்கான உதயம் பதிவு.
  6. எம்எஸ்எம்இ-க்களை குறைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு இ நிர்வாக நடவடிக்கைகளுக்காக 2020 ஜூன் மாதம் சாம்பியன்ஸ் தளம் தொடங்கப்பட்டது.

உதயம் தளத்தின் மூலம் இதுவரை 15,07,128 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில் 43,15,759 பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 2,16,482 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இதில், 11,13,645 பெண்கள் வேலை செய்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,942 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில் 5,500 பெண்கள் வேலை செய்கின்றனர்.

மக்களவையில், எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை, இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

                                 **************
 PKV/KPG/IDS
 


(Release ID: 1881786)