தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தபால் துறை மூலம் நடப்பாண்டில் 5,27,286 உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 07 DEC 2022 1:56PM by PIB Chennai

தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் சேவகர்கள் மூலம் ஓய்வூதியகாரர்களுக்கு ஜீவன் பிரமான் பத்ரா எனப்படும் உயிர்வாழ் சான்றிதழ் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 5,27,286 (31.10.2022 வரை) உயிர்வாழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2,38,811 சான்றிதழ்கள் தமிழ்நாட்டிலும், 2,003 சான்றிதழ்கள் புதுச்சேரியிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவைகள், ஓய்வூதியம் மற்றும் பிற 'நேரடிப் பலன் பரிமாற்றம்' திட்டங்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துசென்றுள்ளது. 0-5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் பதிவு வசதியும் இதேபோல் வழங்கப்படுகிறது. மேலும், இந்தியா போஸ்ட் வெப் போர்டலில் முன்பதிவு செய்த சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பதிவு அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் அலுவலகங்கள் மூலம் வீட்டிற்கு வந்து எடுத்து செல்லும் (பிக்-அப்) வசதியை தபால் துறை தொடங்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. தேவுசின் சவுகான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

**************

AP/SRI/IDS


(रिलीज़ आईडी: 1881419) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati , Malayalam