ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை வரும் 11-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted On: 06 DEC 2022 2:25PM by PIB Chennai

கோவாவில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத்தில் தேசிய யுனானி மருந்து நிறுவனம், தில்லியில் தேசிய ஓமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 11-ந் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிவித்தார். இந்த 3 துணை நிறுவனங்களும் ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆயுஷ் சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெரும் சமுதாயத்திற்கு கிடைக்க செய்தல் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.

கோவாவின் பஞ்ஜிம்-ல் செய்தியாளர்களிடம் பேசிய திரு சர்பானந்த சோனோவால், 9-வது உலக ஆயுர்வேத மாநாடு குறித்து விளக்கினார். இது ஆயுஷ் மருத்துவ முறைகளை உலக அளவுக்கு எடுத்துச்செல்லும் என்று அவர் கூறினார்இந்த நிகழ்வில் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய், ஆயுஷ் செயலாளர் வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரதமர் வரும் 11-ந் தேதி கோவாவில் நடைபெறவுள்ள உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

பாரம்பரிய மருத்துவமுறையில் ஆராய்ச்சி மேம்பாடு, மனிதவளம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்கிற்கு இணங்க இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திரு சர்பானந்த சோனோவால் கூறினார்இந்த நிறுவனங்கள் மூலம், நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் சுகாதார சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்கிறது.

ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகியவற்றில் 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம், பட்டம், முதுநிலைப்பட்டம், மருத்துவப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு 400 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். மேலும் இந்த 3 நிறுவனங்களிலும் 550 கூடுதல் படுக்கைகளும் உருவாக்கப்படும்.

கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் உயர்தர வசதிகளை கல்வி, ஆராய்ச்சி மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் வழங்குவர். இது மருத்துவ மதிப்பு பயணத்தை மேம்படுத்தும் வகையில் நலவாழ்வு மையமாக உருவாக்கப்படும். மேலும் சர்வதேச மற்றும் தேசிய ஒத்துழைப்புடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்கான மாதிரி மையமாகவும் இது செயல்படும்.

தில்லியில் அமையவுள்ள தேசிய ஓமியோபதி நிறுவனம் வடஇந்தியாவில் உருவாக்கப்படும் முதலாவது ஓமியோபதி முறை மருத்துவ நிறுவனமாக அமையும். இது நவீன மருந்துகளுடன் கூடிய ஆயுஷ் சுகாதார சேவைகளை  ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் அமையும் தேசிய யுனானி மருந்து நிறுவனம் பெங்களூருவில் உள்ள தேசிய யுனானி மருந்து நிறுவனத்தின் துணை மையமாக இருக்கும். இது வட இந்தியாவில் முதல் நிறுவனமாக தில்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களின் நோயாளிகளுக்கும், வெளிநாட்டு நோயாளிகளுக்கும் எம்விடி மூலம் சிகிச்சை அளிக்கும்.

கோவாவில் நடைபெறவுள்ள 9-வது உலக ஆயுர்வேத மாநாடு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறும்.

**************

SRI/PKV/AG/IDS


(Release ID: 1881200) Visitor Counter : 179